கடலட்டை வளர்ப்பு பண்ணை முறை சட்டவிரோதமானது: அன்னலிங்கம் அன்னராசா
யாழ். பருத்தித் தீவில் அமையப்பெற்றுள்ள கடல் அட்டை பண்ணை சட்டவிரோதமானது என நெக்டா நிறுவன வட மாகாண உதவி பணிப்பாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கிராஞ்சி இலவன்குடா கடற்தொழிலாளர்கள் மற்றும் ஊர்காவற்துறை கடற்தொழில் சங்கப் பிரதிநிதிகள், கடலட்டை பண்ணைக்கு எதிராக அன்மையில் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடல் அட்டை பண்ணை வளர்ப்புக்கு எதிர்ப்பு
இந்நிலையில் கடந்த புதன்கிழமை விசாரணைக்காக முறைபாட்டாளர்களையும் யாழ், கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நெக்டா நிறுவன
அதிகாரிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
விசாரணையில் பருத்தித் தீவு கடல் அட்டைப் பண்ண தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வினவிய போது கடல் அட்டை பண்ணை வளர்ப்புக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறித்த அதிகாரி, ஆணை குழு முன் தெரிவித்தார்.
மேலும் சட்டவிரோத கடல் அட்டை பண்ணை தொடர்பில் கொழும்பு மேல் அதிகாரிகளுக்கு
தகவல் வழங்கி நடவடிக்கை எடுப்பது குறித்து தமக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டுக்
கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
