கடலட்டை பிடித்த ஏழு பேர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை(Photos)
யாழ்ப்பாணம்-மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரையும், தங்கூசி வலையை பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் நடவடிக்கை

கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்களமும் இணைந்து சோதனை நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் கடலட்டையுடன் இனங்காணப்பட்டதுடன், தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்தல்

மேலும் கடற்கரையோரமாக இருந்த தங்கூசி வலையும் கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த எட்டுப்பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்தொழில் நீரியல்வள திணைக்களம்
நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam