யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ விற்பனை
நாடு முழுவதும் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடல் வெப்பநிலையை குறைத்து குளிர்மையினை எற்படுத்தும் வெள்ளரிப்பழம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) தற்போது மும்முரமாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளரிப்பழ விற்பனை
திருநெல்வேலி, யாழ்ப்பாண நகர சந்தைப்பகுதிகளுக்கு அருகாமையில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகளிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதன்போது, ஒரு வெள்ளரிப்பழத்தின் விலை ரூபா 300 முதல் 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டுவதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |