நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்
பிரபல தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த்துக்கு (Rajinikanth) ‘இன்பார்க்ட்’ என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்க்கு போதிய இரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இரத்த குழாயில் அடைப்பு, அது கிழிந்து போதல், இரத்த பாதை தானாகவே சுருங்குதல், இரத்த குழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை இது குறிக்கிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப் பெற்றால் பெரிய பாதிப்பு ஏதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிருந்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் (M. Venkaiah Naidu) திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பினார்.
இந்தநிலையில் குடும்பத்தினருடன் சென்று அண்ணாத்த படத்தை அவர் பார்த்தமை, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இதனைடுத்து நேற்று பகல் சென்னை - ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.
தற்போது ரஜினிகாந்துக்கு மருத்துவர்கள், தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றதாகவும், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரின் உடல்நிலை கவலைப்படும் வகையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri