சாரதியின் கவனயீனத்தால் நடு வீதியில் தவித்த பொதுமக்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று எரிபொருள் இன்மையால் நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு பதினைந்துக்கு புறப்பட்ட பேருந்து இன்றிரவு (30.1.2024) 8.10 மணியளவில் ஹொரவ்பொத்தானை யான்ஓயா பகுதியில் எரிபொருள் இன்மையால் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வீணடிக்கப்பட்ட நேரம்
இந்நிலையில் குறித்த பேருந்து எரிபொருள் இல்லாமையினால் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் வேறு பேருந்து ஏதும் பயணிகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகின்றனர்.
குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தை செலுத்தும் முன்னரே முன்னாயத்தங்கள் செய்திருக்க வேண்டும் எனவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனையடுத்து சுமார் இரண்டரை மணித்தியாலத்தின் பின் எரிபொருள் கொண்டுவரப்பட்டு பின் பேருந்து செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
