பேருந்தில் இருந்து கீழே விழுந்த மகள் : சாரதியை கடுமையாக தாக்கிய தந்தை
குருணாகலில் இலங்கை போக்குவரத்து சொந்தமான பேருந்தின் சாரதி, நபர் ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
மாவத்தகம பிரதேசத்தில் தனது மகள் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது கீழே விழுந்ததால் அவரது தந்தை பேருந்தின் சாரதியை தாக்கியுள்ளார்.
குருணாகலில் இருந்து நேற்று பிற்பகல் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதி மீது தாக்குதல்
மாவத்தகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பேருந்தின் பின் கதவு வழியாக இறங்க முயற்சித்த மாணவி ஒருவர் தவறி விழுந்துள்ளார். எனினும் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், தன் மகள் பேருந்தில் இருந்து விழுந்ததால் கோபமடைந்த தந்தை, சாரதியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இதுவரை கைது செய்யப்படவில்லை

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
