மட்டக்களப்பில் அரச பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு (Batticaloa)- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் நேற்று (01.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், விபத்தில் முச்சக்கர வண்டி சுக்குநூறாக நொருங்கியுள்ளதுடன், பேருந்தின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri