டெல்லியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது.
டெல்லி கெபிடெல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று(5) 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் அதிசயத் தேர்தல்! தவெக தலைவர் விஜய் சற்றுமுன்னர் வெளியிட்ட பதிவு
டெல்லி கெபிடெல்ஸ்
நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்கம் முதல் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
டெல்லி அணிக்கு ஆரம்ப வீரர்களான பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் நிதானமாக ஆடி முறையே 19 மற்றும் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணியில் நிலைத்து விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்நீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
156 ஓட்டங்களை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உர்வில் பட்டெல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும், சஞ்சு சாம்சன் மற்றும் கார்திக் ஷர்மா ஜோடி சிறப்பாக ஆடினர்.

சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 87 ஓட்டங்களையும், கார்த்திக் ஷர்மா 31 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்தார்.
இதன் காரணமாக சி.எஸ்.கே. அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டகளை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam