வெற்றிக்கு மீண்டும் திரும்புமா சிஎஸ்கே..!
ஐபிஎல் தொடரில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 3ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சிஎஸ்கே, 2ஆவது போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது.
சொந்த மண்ணில் தோல்வியடைந்ததால் சென்னை இரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், அசாம் மாநிலம் கௌஹாத்தியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
சிஎஸ்கே - ராஜஸ்தான்
ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இன்று வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
இதனால், யார் வெற்றிப் பாதைக்கு திரும்புவது என்பதில் சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.
சென்னை அணியில் இன்று துடுப்பாட் வரிசையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபக் ஹூடா, ராகுல் திருப்பதி கடந்த போட்டிகளில் ஜொலிக்காமல் இருப்பதால் அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் இருக்கலாம்.
அணித்தலைவர் ருத்துராஜ் மீண்டும் ஒப்னிங் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சொந்த மைதானமான சேப்பாக்கத்திலேயே பெங்களூர் அணிக்கு எதிராக வெற்றி பெறாத சிஎஸ்கே அணி கௌஹாத்தியில் ராஜஸ்தானை வீழ்த்துமா என்ற கேள்வியும் உள்ளது.
சொந்த மைதானத்தில் தோல்வி
ராஜஸ்தான் ராயல்ஸும் தான் ஆடிய முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
அதிலும் கௌஹாத்தி அந்த அணியின் இரண்டாவது சொந்த மைதானம் ஆகும். அந்த அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கும் ரியான் பராக்-கின் சொந்த ஊரும் அதுதான்.
மறுபுறம் சிஎஸ்கே அணியும் தனது சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்துள்ளது.
எவ்வாறாயினும் இரண்டில் ஒரு அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.
கௌஹாத்தி மைதானமும் கிட்டத்தட்ட சிஎஸ்கே மைதானம் போலவே உள்ளது.
அங்கும் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுக்கு சரி சமமான வாய்ப்பு உள்ளது. அங்கு நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் றோயல்ஸை வீழ்த்தி இருந்தது.
இதுவரை 29 முறை மோதியுள்ளன
அங்கு முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 151 ஓட்டங்கள் எடுத்தது.
அதை துரத்தியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
குறிப்பாக, அந்த மைதானத்தில் 180 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தால் அது நல்ல ஸ்கோர் என கூறப்படுகிறது.
எனவே, சிஎஸ்கே அணி அங்கு துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும்.
ஐ.பி.எல். தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4இல் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |