கிரிப்டோ நாணயங்கள் குறித்து ஆராய குழு!
இலங்கையில் ‘கிரிப்டோ நாணயங்கள்’ தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற கொள்கைத் தீர்மானங்களை எடுக்க உயர் மட்டக் குழுவொன்றை நிறுவ வேண்டும் என மத்திய வங்கி, அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கான கடிதம் ஏற்கனவே மத்திய வங்கியால் நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நிதி அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கிரிப்டோ நாணயங்கள் தொடர்பான கொள்கை ரீதியான முடிவுகளை உருவாக்க ஆலோசனை வழங்குவதே இக்குழுவின் முக்கிய குறிக்கோள் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசு அமைச்சர்களின் சொத்து அறிக்கைகளில் கூட கிரிப்டோ நாணயங்களில் முதலீடுகள் இடம்பெற்றிருப்பது அண்மையில் சமூகத்தில் பேசுபொருளாக மாறியிருந்தது.
மேலும், “கிரிப்டோ நாணயங்களைப் பற்றிய சிறப்பான சட்டம் இதுவரை இலங்கையில் இல்லை” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் ஊடகச் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.



