சுப்பர் மார்க்கெட் பொருட்களை கொள்வனவு செய்த பெண்ணுக்கு நடந்த கொடுமை
பேருவளை நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த பெண் ஒருவர் நான்கு சொக்லேட்களை திருடியதாக கூறி தாக்கப்பட்டுள்ளார்.
இதானல் சுப்பர் மார்க்கெட் ஊழியர்கள் நால்வர் அவரை மேல் மாடிக்கு இழுத்து சென்று கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காயமடைந்த பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, கடை ஊழியர்கள் நால்வர் பேருவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பையில் நான்கு சொக்லேட்டுகளை மோசடியான முறையில் வைத்திருந்ததாக கூறி அந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் அந்த சொக்லேட்டுகளுக்கான கட்டணம் செலுத்திய பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் அளுத்கம மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எவரையும் தாக்கவோ அல்லது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்துவதற்கு எவருக்கும் உரிமையில்லை என்றும் பேருவளை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி லலித் பத்மகுமார குமார தெரிவித்துள்ளார்.