குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முன்வந்த ரஷ்ய நிறுவனம்:கவனத்தில் கொள்ளாத இலங்கை அரசு
ரஷ்யாவின் கசானி எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு குறைந்த விலையில் கச்சாய் எண்ணெயை வழங்க முன் வந்த போதிலும் இலங்கை அரசு அது குறித்து கவனத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
24.9 மில்லியன் பீப்பாய் கச்சாய் எண்ணெயை ஏற்றிய 35 கப்பல்கள் சுயஸ் கால்வாய் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ரஷ்யாவில் தினமும் உற்பத்தி செய்யப்படும் கச்சாய் எண்ணெய் தொகையானது மூன்று லட்சத்து 13 ஆயிரம் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிலைமை காரணமாக அதனை விற்பனை செய்ய முடியாத நிலைமை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.
சுயஸ் கால்வாயில் இருந்து ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் துரிதமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைய முடியும். எனினும் இலங்கை தொடர்ந்தும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்து வருகிறது.
இலங்கைக்கு கச்சாய் எண்ணெய்யை விநியோகிக்கும் வர்த்தக வலையமைப்பு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய இடமளிப்பதில்லை எனவும் எரிபொருள் சர்வாதிகாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.