போர் பதற்றம்! உலக சந்தையில் கிடுகிடுவென உயரும் எண்ணெய் விலை
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல், இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
விலை நிலவரம்
அதன்படி, சர்வதேச அளவில் ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.22 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 106.355 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த புதன்கிழமை நிலவரத்தை விட 5% அதிகமான உயர்வு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சந்தைத்தரவுகளின்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.17 சதவீதம் அதிகரித்து, 96.97 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், ஒரு பெரல் மெர்பன் கச்சா எண்ணெயின் விலை 2.74 சதவீதம் அதிகரித்து 105.95 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam