உலகச் சந்தையில் சரிவைச் சந்தித்துள்ள கச்சா எண்ணெய் விலை
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
இதற்கு மேலதிகமாக, முர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.8 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான கப்பல் போக்குவரத்து வேகப்படுத்தப்பட்டதை அடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெனிசுலாவின் ஏப்ரல் மாத எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.23 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாக அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த பெறுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு எடுத்த வானதி.. அதிர்ச்சியில் பாண்டியன்.. அய்யனார் துணை சீரியல் Cineulagam