புதுக்குடியிருப்பில் பெட்ரோலுக்கு நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பெட்ரோல் இல்லாத நிலையில் இன்று இரண்டு பௌசர் பெட்ரோல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளி பாவனையாளர்கள் நீண்டநேரம் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றார்கள். எனினும் மண்ணெண்ணெய், டீசல் இல்லாத நிலை தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது.
எதிர்வரும் காலத்தில் பெட்ரோலுக்காக தட்டுப்பாடும் ஏற்படும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் வரிசையில் நின்று பெட்ரோலினை பெற்று வருகின்றார்கள்.
முச்சக்கரவண்டி, உந்துருளி, கார்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே
பெட்ரோலினை வழங்கி வருகின்றார்கள்.




ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
