இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடு குறைந்துள்ளது - டக்ளஸ் தேவானந்தா
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடு அண்மைய நாட்களாக குறைவடைந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார்.
யாழில் நேற்று(01) இடம்பெற்ற கடற்றொழில் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் கடற்றொழிலாளர்களுக்கான மனிதாபிமான உதவிப் பொதிகள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“குறித்த எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் செயற்பாடுகள் அவதானிக்கப்படுமாயின், அதற்கெதிராக வடக்கு கடற்றொழிலாளர்கள் ஜனநாயக வழியில் தமது அதிருப்தியை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களினால் பாதிப்புக்களை எதிர்கொண்ட வட பகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உதவித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ள நிலையில், முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகள் கட்டங்கட்டமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் இன்னும் சில
வாரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடும் என்று நம்பிக்கை
வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர், எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பதைப் போன்று
தற்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது” எனவும் தெரிவித்தார்.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
