கொழும்பில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள முதலைகள்! - பொறி வைத்து பிடிக்க நடவடிக்கை (Video)
கொழும்பின் - தெஹிவலை, வெள்ளவத்தை மற்றும் காலிமுகத்திடல் கடற்கரை பகுதிகளில் முதலைகளின் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
தெஹிவலை கடற்பரப்பில் வைத்து இரத்மலானையைச் சேர்ந்த 58 வயதான நபர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், வனவிலங்கு அதிகாரிகளால் முதலையை பிடிக்க முடியாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை (09) காலி முகத்திடலின் கரையோரத்தில் மற்றுமொரு முதலை காணப்பட்டது.
இதனால், கடலோரப் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்த்தனர். இதனையடுத்து நடவடிக்கை எடுத்த வனவிலங்கு அதிகாரிகள் முதலைகளை பிடிக்கும் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
காலி முகத்திடல் கடற்பரப்பின் ஒரு பகுதியில் இரண்டு பொறிகளை வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முதலைகள் பெய்ரா ஏரியின் நீர் முகத்துவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்த அசங்க குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதலை கடலில் இருந்து பெய்ரா ஏரி நீர் முகத்துவாரம் வழியாக ஏரிக்குள் செல்வதை வனவிலங்கு அதிகாரிகள் அவதானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலைகளை கவரும் வகையில் இறைச்சித் துண்டுடன் புதிய வகைப் பொறி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் மேற்படி நீர்முகத்தின் இரண்டு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri