மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளிக் குளத்தில் முதலைகள் அதிகளவு நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் முற்றாக நீர் நிரம்பியுள்ள நிலையில், குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குளத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அந்தக் குளத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள வெல்லாவெளி குளத்தில் மாத்திரம் பல முதலைகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து இவ்வாறு குளத்திற்கு முதலைகள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

குறித்த குளம் மக்கள் குடியிருப்பையும் அண்மித்துள்ளதனால் பொதுமக்களும், அப்பகுதியில் இரவு வேளைகளில் பயணம் செய்யும் பிரயாணிகளும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam