கணவன் மனைவியை போன்று செயற்படும் தமிழ், முஸ்லிம் கட்சிகள்: முன்வைக்கப்பட்ட விமர்சனம்
எப்போதும் கணவனும் மனைவியும் போன்று இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம் தேர்தல் காலங்களில் இனவாதத்தை தூண்டி மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதாக ஐக்கிய காங்கிரஸ் கட்சி தவிசாளர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“முஸ்லிம் சமூகம் உசுப்பேத்தும் அரசியலுக்கு அடிமையாக இருப்பதை காண்கின்றோம். தேர்தல் அல்லாத காலங்களில் இனவாத அரசியலை விரும்ப மாட்டார்கள்.
இனவாத அரசியல்
இன ஐக்கியம் என்பார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் வேண்டுமென்றே மக்களை உசுப்பேற்றி தங்களுக்கு வாக்குகளை பெறுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாதத்தை முஸ்லிம்கள் மத்தியில் இணைத்து பிற இனவாதிகளை கொண்டு வந்து அவர்களை பேச வைத்தாவது இனவாதத்தை உருவாக்குவதை காண்கின்றோம்.
எனவே தான் இவ்வாறான அரசியலை செய்ய வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை கேட்கின்றோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் எப்போதும் கணவனும் மனைவியும் போன்று தான் இருப்பார்கள். தேர்தல் வந்ததும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தமிழருக்கு எதிராக பேசுவார்கள்.
இவ்வாறாக பேசி தத்தமது பக்கம் உள்ள இனரீதியாக சிந்திக்கின்ற மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறான அரசியலை உலமா கட்சியாகிய நாம் மறுத்து வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri
