மட்டக்களப்பில் சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வயது சிறுமியிடம் தவறான நடத்தைக்குட்படுத்திய தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (16.01.2026) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபர் அவரது 4 வயது 8மாதம் கொண்ட சிறுமியிடம் தவறான நடத்தைக்குட்படுத்திய பாதிக்கப்பட்ட சிறுமி, அவருடைய தாயாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, தாயார் பொலிஸ் நிலையத்தில் நேற்று(15.01.2026) முறைப்பாடு செய்த நிலையில், சிறுமியின் தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று (16.01.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.