ஏழை மக்களை சுரண்டி ஆட்சியை தொடரும் அநுர அரசு..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government UNP NPP Government
By Rakesh Jul 04, 2026 05:50 AM GMT
Report

 தேசிய மக்கள் சக்தி அரசானது டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் நேற்று(03.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திரவ உணவுகளுக்கான வண்ணக்குறியீடு விதிகளில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி

திரவ உணவுகளுக்கான வண்ணக்குறியீடு விதிகளில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பெருமளவான நிதிச் செலவில் 'கிளீன் ஸ்ரீலங்கா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய போதிலும், தற்போது டெங்கு நோய் நாடளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவியுள்ளது.

ஏழை மக்களை சுரண்டி ஆட்சியை தொடரும் அநுர அரசு..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு | Criticism Regarding Sri Lanka S Economic Crisis

தேசியடெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்து 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டின் பல மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளன.

இந்நிலைமை மேலும் தீவிரமடைந்தால் பேரழிவை ஏற்படுத்தும் எனச் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கும் சூழலிலும், அரசிடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. எனவே, டெங்கு ஒழிப்பை விரைவுபடுத்தி மக்களைப் பாதுகாப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை வகுக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகள் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வெற்றிடங்களால் வழக்கு விசாரணைகள் முடங்கி, கடுமையான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலைமையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீழ் நீதிமன்றங்களில் உள்ள தகுதியான அதிகாரிகளை மேல் நீதிமன்றங்களுக்கு நியமிக்கும் பாரம்பரியத்தை மீறி, பதவிக் காலத்தை நீடிக்க முயல்வதற்குப் பின்னால் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த வெற்றிடங்களுக்கான பெயர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதால், பாரம்பரியங்களை உடைக்காமல் தகுதியான நீதிபதிகளை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி தலையிட வேண்டும்.

இலங்கை பொருளாதார வளர்ச்சி

இலங்கை நடுத்தர வருமான நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலத்திலும் இந்நிலை சாத்தியமானது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். தற்போதைய அறிவிப்பால் ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 2018 ஐ விட பொருள்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளன.

எரிபொருள் விலையைப் பெருமளவில் அதிகரித்துவிட்டு, பின்னர் சொற்ப தொகையால் குறைத்து அரசு பெருமை பேசுகின்றது. போதிய எரிபொருள் இருப்புக்கள் இருந்த போதிலும், கறுப்புச் சந்தை முதலாளியைப் போல நுகர்வோரைச் சுரண்டி அரசு இலாபம் ஈட்டியுள்ளது.

ஏழை மக்களை சுரண்டி ஆட்சியை தொடரும் அநுர அரசு..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு | Criticism Regarding Sri Lanka S Economic Crisis

மக்களை வதைத்து வரி வசூலித்து திறைசேரியை நிரப்பியுள்ளதாகக் கூறும் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மாறாக, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும் என மக்களை மேலும் சுரண்டுகின்றது.

ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு 120 ரூபா சான்றிதழ் விலை வழங்குவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி, அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அரசின் நெல் களஞ்சியசாலைகள் நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வராததால் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

போராடும் விவசாயிகளை அரசின் அமைச்சர்கள் அவமதிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை. உள்நாட்டு நெல் களஞ்சியங்களில் தேங்கிக் கிடக்கையில், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் அமைச்சர்களிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளனவே தவிர, முறையான திட்டங்கள் எதுவுமில்லை என்றார்.  

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் 57 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் 57 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை


மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US