அரச வாகனங்களை காட்சிப்படுத்துவதற்கு எதிராக விமர்சனம்
காலி முகத்திடலில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம (Dilum Amunugama ) கண்டனம் தெரிவித்துள்ளார்
இந்த வாகனங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களால் பயன்படுத்தப்பட்டவை என தெளிவுபடுத்தினார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும், அவை தற்போது காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் கேலி செய்வது ஏற்கத்தக்கது, ஆனால் பதவியேற்ற பிறகு அவ்வாறு செய்வதை ஏற்க முடியாது என்று திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகனங்கள் திருடப்பட்டால், அது முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் என்றும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம்
தற்போதைய அரசாங்கம் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று வேலை செய்ய உத்தேசித்துள்ளதாயின், தமது விருப்பத்திற்கேற்ப அதனைச் செய்வதற்கு சுதந்திரம் இருப்பதாகவும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கடந்த அரசாங்கங்களின் போது, பொதுமக்களிடம் அவ்வாறான எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக வாகனங்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் இல்லை என்பதற்காக அவற்றை காட்சிப்படுத்துவது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அமுனுகம தெரிவித்துள்ளார்.
]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
