ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அந்த கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகுமாறு கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கட்சியின் தலைவரது தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
