இலங்கை அரசியலின் திசையை தீர்மானிக்கவுள்ள ஐந்து பாரிய நெருக்கடிகள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடி நிலை எதிர்வரும் மார்ச் மாதத்தில் உச்சத்தை எட்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila)தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கையில் ஐந்து பாரிய நெருக்கடிகள் உருவாகும்.அதுவே இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும்.
"மக்களில் சிலர் தாங்கள் தற்போது நெருக்கடியில் இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, மார்ச் மாதத்திலேயே நெருக்கடி உச்சத்தை எட்டும்.இந்த நெருக்கடி தான் அரசியலின் திசையை தீர்மானிக்கும்.
தற்போது இவ்விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் உள்ளகப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், உள்ளகப் பேச்சுவார்த்தையில் தேவையான முடிவுகள் கிடைக்காவிட்டால் வெளிப்படையாகப் பேசத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri