இலங்கையில் சிக்கியுள்ள உக்ரேன் நாட்டவர்களுக்கு நெருக்கடி நிலை
உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து அந்நாட்டுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள உக்ரைன் நாட்டவர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர்.
தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலைமை காரணமாக தொடர்ந்து இலங்கையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த உக்ரைன் நாட்டவர்களுக்கு நாடு திரும்ப எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரியாத நிலையில் தங்கள் உறவினர்களை தொடர்பில் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையால், அங்குள்ள மக்களை தொலைபேசி அல்லது ஒன்லைன் மூலம் தொடர்புகொள்வது மிகவும் கடினமான நிலைமையாகியுள்ளது.
அதேவேளை இலங்கையில் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நிதி நெருக்கடிக்கும் அவர்கள் முகங்கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை ரஷ்யாவின் கடுமையான தாக்குதல் காரணமாக உக்ரேன் நாட்டு மக்கள் அயல் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது இரண்டாவது நாளாக போர் தொடுக்கும் ரஷ்யா! தலைநகர் கீவில் குண்டு வெடிப்பு (Live Update)
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் வலுக்கும் போர்! முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்..