அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வெளியானது கருத்து கணிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மக்களின் ஆதரவு வேகமாக சரிந்து வருவதாக கருத்து கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை,துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்றும்,ஜனநாயக கட்சியை சேர்ந்த சிலரும்,பொது மக்களும் கருத தொடங்கியுள்ளதாக கருத்து கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக அமெரிக்க அதிபர்களின் ஆட்சியின் போது, அவர்களுக்கான மக்கள் ஆதரவு குறித்து approval rating என்று அழைக்கப்படும் கருத்து கணிப்பு நடத்தப்படும்.இதன்மூலம் அதிபர்களின் ஆட்சி முறையை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா ,இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பின் மூலமே உறுதி செய்யப்படும்.
இந்நிலையில், இவ்வாறு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தற்போதைய அமெரிக்க அதிபர் பைடனுக்கான மக்கள் ஆதரவு பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர்களுக்கான approval rating கருத்து கணிப்புகளை துல்லியமாக வெளியிடும் Rasmussen Reports அமைப்பு ஜோ பைடனுக்கான மக்கள் ஆதரவு வெகுவாக சரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
அதன்படி ஜோ பைடனுக்கான மக்கள் ஆதரவு கடந்த கருத்து கணிப்பில் 53 ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அவருக்கான ஆதரவு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. அவருக்கு தற்போது மக்கள் ஆதரவு 46 சதவிகிதம் மட்டுமே உள்ளது.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதும். அங்கு தாலிபான்கள் வெற்றி பெற்றதும் இந்த ஆதரவு குறைய காரணமாக பார்க்கப்படுகின்றது. 54 சதவிகிதம் பேர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
மாறாக துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 43 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.அதிபர் பைடனை விட இவருக்கான ஆதரவு 3 சதவிகிதம் குறைவாக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் இவரை ஆதரிக்கும் மக்கள் சதவிகிதம் கடந்த சில மாதங்களாக உயர தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் கடுமையான ராணுவ கொள்கைகள், ஆயுத ஆதரவு காரணமாக இப்படி இவருக்கான செல்வாக்கு உயர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. தற்போது பைடனை விட இவருக்கான ஆதரவு குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் மக்கள் இவரை அதிகம் ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கான் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு வெகுவாக சரிந்துவிட்டதாக அந்த கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வெளியேற்றிய விதம் தவறானது. அவர் வலிமையான அதிபராக செயற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஆப்கான் படைகள் வலிமையானது என்று தவறான கருத்தை தெரிவித்து தனது அரசியல் கணிப்பில் தோல்வி அடைந்துள்ளதாகவும், உளவுத்துறையை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கணிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.