விளையாட்டுத்துறை அமைச்சில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் உடற்தகுதி மையத்திற்கான ஜிம் உபகரண கொள்வனவு தொடர்பான கேள்விப்பத்திர நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சில் நெருக்கடி நிலை எழுந்துள்ளது.
இந்த கேள்விப்பத்திரங்களுக்காக விண்ணப்பித்த, சமர்ப்பித்த இரு நிறுவனங்களின் கேள்விப்பத்திர கோப்புகளில் குறைபாடுகள் உள்ளன.
அதில் தான் அதிக விலைக்கோரலை சமர்ப்பித்த நிறுவனத்திடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
விடயங்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அதிகாரிகளும் அதிக விலையை சமர்ப்பித்த நிறுவனத்தின் உபகரணங்களை கொள்வனவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களில் ஒன்று 74 மில்லியன் ரூபாவையும் மற்ற நிறுவனம் 66
மில்லியன் ரூபாவையும் விலைக்கோரல்களாக சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.