இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - பிரதமர் மஹிந்தவின் அதிரடி உத்தரவு! செய்திகளின் தொகுப்பு
நாட்டில் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவு குறைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) ஆலோசனை வழங்கியுள்ளார்.
இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கி, அவற்றுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Nivard Cabral) அதற்கான தீர்வுகளை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சில இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் தொழில் துறையையும் அதனால் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் பாதிக்கும் என தொழில்சார் வல்லுநர்கள் அண்மையில் குறிப்பிட்டனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri