நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
கடந்த காலங்களில் தவணைக் கொடுப்பனவு முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொள்வனவு செய்த பொருட்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதற்கான கொடுப்பனவுகள் மாதந்தோறும் செலுத்தப்பட்டு வந்தது. அதற்கான பணம் திறைசேரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படடு வந்தது.
எனினும் கடந்த சில மாதங்களாக திறைசேரி அதற்கான பணத்தை செலுத்த தவறியுள்ளதன் காரணமாக குறித்த கொடுப்பனவுகளை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அலுவலகங்களுக்காக இவ்வாறான தவணைக் கொடுப்பனவு முறையில் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.அதன் காரணமாக கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri