இலங்கை வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
பதுளை மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எல்ல நகரில் பொதுக் மலசலகூடம், குடிநீர்க் குழாய் அமைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலைமையினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் எனப் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
முறையான கழிவுநீர் அமைப்பு இல்லாத காரணத்தால், வடிகாலில் வியாபாரிகளை கழிவுகளை விடுவிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரண்டு தற்காலிக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ள போதிலும் அது மிகவும் மோசமான நிலையில் உள்ளதென தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கழிப்பறையின்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
