ராகம வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! - நடைபாதையில் உறங்கும் கோவிட் நோயாளிகள்
ராகம போதனா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் நோயாளர்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நோயாளிகள் பலர் இடவசதி இன்மையால் விடுதியின் நடைபாதையில் உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. கோவிட் தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் உடலும் விடுதியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், விடுதிகளில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பல நோயாளிகள் தரையில் படுத்து மிகவும் சிரமப்பட்டு சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து ராகம போதனா வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் சம்பத் லியனகே ரணவீர கருத்து வெளியிடுகையில்,
“ராகம போதனா வைத்தியசாலையின் இரண்டு விடுதிகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். நாளாந்தம் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.
தற்போது 236 படுக்கைகளுடன் 10 விடுதிகள் வைத்தியசாலையில் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக பராமரிக்கப்பட்டு வருகிறது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது, ராகம, கந்தனாவில் உள்ள கோவிட் மையத்தில் 1020 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட் நோயாளிகளுக்கான மற்றொரு 28 படுக்கைகள் கொண்ட விடுதி ராகம போதனா வைத்தியசாலையில் இந்த வாரம் திறக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும், இரண்டு பணியாளர்கள் உட்பட 10 செவிலியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
