இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தேடப்பட்டு வந்த நபரொருவர் கைது
இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபரான போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுருவல ஆராச்சிகே உஷான் சதுரங்க விமலவீர என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் கைது
சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மகசீன் மற்றும் இரண்டு 6.35 மி.மீ தோட்டாக்கள் என்பனவும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாள உலகக்குழு தந்தை என்றழைக்கப்பட்ட சமயன் என்ற அருண உதயந்த 2017ஆம் ஆண்டு படுகொலை செய்யப்படும் வரை அவருடன் சத்துரங்க விமலவீர இணைந்திருந்தார்.

அதன் பின்னர் அவர் மற்றொரு பிரபல பாதாள உலகக் குழுவை சேர்ந்த ஒருவரான 'உருஜுவா' என அழைக்கப்படும் தினேத் மெலன் மாம்புலவுடன் இணைந்திருந்தார்.
போதைப்பொருள் கடத்தல்
2021இல் உரு ஜுவா'வின் மரணத்தைத் தொடர்ந்து சதுரங்க விமல்வீர போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan