நாடாளுமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் எதிர்வரும் 18ஆம் திகதி நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற குழு
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியதான குற்றச்சாட்டு
தொடர்பிலேயே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிமுறைகள் மற்றும்
சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக
அதன் தலைவர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri
