நாட்டில் இடம்பெற்ற குற்றசெயல்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2024 ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில்(கடந்த 24 மணித்தியாலங்களில்) இடம்பெற்ற குற்றசெயல்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு(police media division) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
காலி- ஹக்மன, அனுரதபுரம்-அலையபத்துவ, திருகோணமலை- சேருநுவர மற்றும் மாத்தளை- கலேவெல பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள்
குறித்த குற்றச் செயல்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குற்ற செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
