கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுக்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா
கிரைமியா தீபகற்பத்தையும் உக்ரைனையும் இணைக்கும் பாலமானது உக்ரைனின் தாக்குலினால் சேதமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இதேவேளை சோங்கார் பாலம், உக்ரைனின் தென் பிராந்திய மாகாணமான கேர்சோனையும் கிரைமியாவையும் இணைக்கிறது.
சோங்கார் பாலம் மீது தாக்குதல்
கேர்சோன் பிராந்தியமும் தனக்குரியது என கடந்த வருடம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதன் பின்னர், அப்பிராந்திய தலைநகரை உக்ரைன் மீளக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றிரவு நடந்த தாக்குதலில் உக்ரைன் சோங்கார் பாலத்தை தாக்கியது.
எனினும் இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட உக்ரைனிய ஆளுநர் சேர்ஜி அக்சினோவ் தெரிவித்துள்ளார்.
A video of the attack on the #Chongar bridge appeared. pic.twitter.com/m0FgupBP7b
— NEXTA (@nexta_tv) June 22, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |