நிபந்தனைகளை மீறி உக்ரைனுக்கு உதவிய நாடு! வெடித்தது புதிய சர்ச்சை
ஜேர்மன் நிறுவனம் ஒன்று சுவிஸ் கவச வாகனங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்துள்ளது விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய உக்ரைன் போரில் நடுநிலைமையை பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து உறுதியாக உள்ளது.
ஆகவே, சுவிட்சர்லாந்திடமிருந்து ஆயுதங்கள் மற்றும் போர் வாகனங்களை வாங்கும் நாடுகள், அவற்றை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய தொடர்ந்து அனுமதியளிக்க மறுத்துவருகிறது.
சுவிட்சர்லாந்தின் அதிரடி முடிவு
ஆனால் உக்ரைனில், சுவிஸ் நிறுவனமான Mowag நிறுவனத்தின் தயாரிப்பான கவச வாகனங்கள் பயன்படுத்தப்படும் காட்சிகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, சுவிஸ் பொருளாதார அமைச்சகம் விசாரணை ஒன்றைத் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் ஜேர்மனிக்கு வழங்கப்பட்ட கவச வாகனங்களின் வெளிக்கவசத்தை அகற்றிய பின், அந்த வாகனங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய ஜேர்மன் பாதுகாப்புத்துறை அனுமதித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
வாகனங்களில் மாற்றம் செய்தாலும், அது நிபந்தனைகளை மீறும் செயலே என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
ஆகவே, நிபந்தனைகளை மீறி அந்த ஜேர்மன் நிர்வாக இயக்குநர் சுவிஸ் வாகனங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்துள்ளதையடுத்து, சுவிஸ் வாகனங்களை விற்பனை செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் கவச வாகனங்கள் விற்பனை
மேலும் 1990களில், 36 சுவிஸ் கவச வாகனங்கள் டென்மார்க் நாட்டுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு, சுவிஸ் அதிகாரிகள் அனுமதியுடன் அவற்றில் 27 கவச வாகனங்கள் ஜேர்மன் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர், அந்த கவச வாகனங்களை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |