தந்தையால் 15 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம் (Video)
நாட்டில் பல குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. இவற்றில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள், கொலை, கொள்ளை என பல சம்பவங்கள் அடங்குகின்றன.
தனது 15 வயது மகளுடன் இரண்டு வருடங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும 48 வயது தந்தை ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
இதைத்தவிர மட்டக்களப்பு - வாகநேரி பிரதேசத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதில் இருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தென்னிலங்கையில், நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாகவும் இந்த படுகொலையை பெண் ஒருவரே செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு கடந்த வாரங்கள் பதிவாகிய குற்றச்செயல்களையும் அதனோடு இணைந்த மேலதிக தகவல்களையும் தொகுத்து வழங்குகின்றது எமது குற்றப்பார்வை நிகழ்ச்சி





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
