ஒரே பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளை
மட்டு - ஓட்டு மாவடி பிரதேசத்தில் உள்ள இரு வீடுகள் உடைத்து ஒரு இலட்சத்து 74 ஆயிரம் ரூபா பணமும் 6 பவுண் தங்க நகையும் கொள்ளையடித்து சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (26) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட இடங்கள்
ஓட்டுமாவடி 2ம் பிரிவு சந்தை வீதியிலுள்ள வீடு ஒன்றில் அனைவரும் நித்திரையில் இருந்த போது அதிகாலை 2.45 மணியளவில் வீட்டின் யன்னலை உடைத்து கொண்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் அலுமாரியில் இருந்த 6 பவுண் தங்கநகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதேவேளை இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரம் கொண்ட குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் அதிகாலை 3.30 மணிக்கு யன்னலை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்த ஒரு இலட்சத்து 74 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தடயவியல் பிரிவு விசாரணை
இது தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை
வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.