வீட்டின் யன்னல் வழியாக சென்று திருடிய நபர் கைது (Photo)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை நெசவு வீதியிலுள்ள வீட்டு சமயலறை யன்னல் வழியாக திருடன் உள் நுழைந்துள்ளான்.
குறித்த வீட்டின் பதினைந்து வயதுடைய சிறுமியின் தங்க மாலையை அறுக்க முற்பட்ட போது சிறுமி சத்தம் எழுப்பிய நிலையில் திருடன் தப்பி சென்றுள்ளான்.
இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திருடப்பட்ட பொருட்கள்
இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த திருடன் அலுமாரியை உடைத்து அதிலிருந்த இருபத்தையாயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துள்ளான்.
இதன் பின்னர் அங்கு உறங்கி கொண்டிருந்த சிறுமியின் கழுத்தினை நசுக்கி தங்க மாலையை அறுக்க முற்பட்ட போது சிறுமியின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழும்பிய நிலையில் மாலையை எடுக்காமல் தப்பி சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
மேலும் சிறுமி கூறிய அடையாளத்திற்கமைய குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இளைஞர் திருட்டு சம்பத்துடன் பல தடவை கைது செய்யப்பட்டவர் என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைபொருள் பாவனையால் இவ்வாறான திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைபொருள் பாவனையால் பலமுறை சிறைச்சாலைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து வெளிநாடு சென்றவரின் வயிற்றில் பெருந்தொகை இரத்தின கற்கள் |





குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
