ஆயிஷா கொலை விவகாரம்! சந்தேகநபர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் சிறுமி ஆயிஷா உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமி ஆயிஷாவை கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர் |
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ
இதேவேளை கொலை செய்யப்பட்ட சிறுமி வன்புணர்வு செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சடலத்தின் பிரேதப் பரிசோதனை மூன்று தடயவியல் அதிகாரிகளில் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூக்கு மற்றும் வாயின் ஊடாக தண்ணீர் மற்றும் சேறு சென்றதன் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அட்டுலுகம சிறுமி விவகாரம்! குற்றத்தை ஒப்புகொண்ட நபர் : பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை (Video) |