இலங்கையில் ஆபத்தில் உள்ள இளைஞர்கள்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞர்கள், தற்போது புதிதாக குற்றச்செயல்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்திருப்பதாக பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வெளி விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணருமான டி.எம்.எஸ். தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமீபத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாதத்திற்கு சுமார் 40 இளைஞர்கள் புதிய குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாக தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
நாட்டில் நடைபெறும் குற்றங்களை சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடும் போது, அது ஒரு குறிப்பிட்ட அளவிலான அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வரும் சூழலில் இது போன்ற ஒரு விடயம் நாட்டிற்கு நல்லதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



