இலங்கையின் கிரிக்கட்டில் அரசியல் ஆதிக்கம்- குற்றம் சுமத்தும் ரொஷான் மஹாநாம
இலங்கையில் கிரிக்கெட் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் கிரிக்கட் மேம்படவேண்டுமானால், அது பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.
ரொஷான் மஹாநாம, ஸ்ரீலங்கா கிரிக்கட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
தாம் குறித்த நிலைக்கு நியமிக்கப்படும்போது கிரிக்கட்டை முன்னேற்ற சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
எனினும் இன்னும் பல செயற்பாடுகள் செய்யப்படவேண்டியுள்ளதை தாம் உணர்வதாக மஹாநாம குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக விளையாட்டின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இலங்கையின் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் விளையாட்டை ஊக்குவிக்க முயற்சிக்கின்றன
எனினும் இலங்கையில் கிரிக்கட்டை பாதுகாக்க முயற்சிக்கவேண்டியுள்ளது என்றும் மஹாநாம தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
