தனுஷ்க குணதிலக்கவுக்கு கிரிக்கெட் தடை-சட்டமா அதிபர் ஆலோசனை
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான அனைத்திற்கும் தடைவிதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
கிரிக்கெட் சம்பந்தமான எவற்றிலும் கலந்துக்கொள்ள முடியாது
சட்டமா அதிபரின் இந்த ஆலோசனைக்கு அமைய கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான எதிலும் கலந்துக்கொள்ள முடியாதபடி தனுஷ்க குணதிலக்கவுக்கு தடைவிதிக்க உள்ளதாகவும் வழக்கு விசாரணை முடியும் வரை இந்த தடை தொடரும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே தனுஷ்க குணதிலக்கவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் தற்காலிக தடையை விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய தனுஷ்க
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொண்டிருந்த போது பெண்ணொருவரை வன்புணர்வு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சிட்னி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
