வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை திருடும் நபர் - பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு
இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்கு கைத்தொலைபேசிகள், மூன்று சிறிய கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம் அட்டைகளை குறித்த நபரிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை கைது செய்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கம்பஹா, கெஸ்பேவ, ராகம, வேயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹகொட கேகாலை, அனுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
