மட்டக்களப்பில் மாடுகள் களவாடப்படும் அவல நிலை
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லாவெளி, தும்பங்கேணி பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த பசுவும் கன்றுக் குட்டியும் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.
களவாடியவர்கள் அதனை பற்றைக்காட்டுப் பகுதியில் வைத்து இறைச்சிக்காக வெட்டியுள்ளதுடன் அதன் மீதிப்பகுதியினை அப்பகுதியில் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
மக்கள் கோரிக்கை
இந்நிலையில், இவ்வாறான சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
போரதீவுப்பற்று பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு வருவதாகவும் இவை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 17 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam