மயிலத்தமடு மேய்ச்சல் தரையின் சட்டவிரோத மின் வேலிகளில் சிக்கிய பசுக்கள்
மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின் வேலிகளில் தொடர்ந்தும் பசுக்கள் சிக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்ட இருவர் அமைத்த மின் வேலியில் பசு ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளது.
தொடர்ந்து, இந்த இருவரும் கடந்த 24.11.2023 அன்று வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இருவரின் வழக்கு இன்று (12.01.2024) நடைபெறுகின்ற வேளை, மீண்டும் இரண்டு பசுக்கள் அவர்களால் நேற்று வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்துள்ளன.
கவலை தெரிவித்த பண்ணையாளர்கள்
தொடர்ந்து, பசுக்களை தேடிச்செல்லும் போது, சந்தேகநபர்கள் இருவரும் பசுவை உரித்து இறைச்சியை எடுத்துக்கொண்டு ஓடியதை பசுக்களினுடைய உரிமையாளர்கள் கண்டுள்ளனர்.
அவர்களை பின் தொடர்வதற்கு முடியவில்லை என கவலையுடன் பசுக்களின் உரிமையாளர்கள் தெரிவித்துடன், குறித்த விடயம் பண்ணையாளர் சங்கத்தின் தலைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |