திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் அரச வாகனம் மோதியதில் மாடு பலி
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நேற்று (16) காலை ஏற்பட்டவாகன விபத்தில் மாடொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வான், அலுவலகப் பணி நிமித்தம் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
வீதியின் குறுக்கே நின்ற மாட்டுடன் வாகனம் பலமாக மோதியதில் மாடு உயிரிழந்துள்ளதுடன், வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தில் பயணித்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி! பின்னணியில் மறைந்துள்ள அரசியல் உத்தரவுகள்

