நடுவீதியில் தாயின் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த கொடூரம்! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் (Photos)
சென்னை - அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
அந்த காணாளியில், சிறுமி அவரது தாயாருடன் பாடசாலை சென்று கொண்டிருக்கும் போது குறித்த மாடு தாக்கியுள்ளது.
சிறுமியை தாக்கிய மாடு
தாயின் கண் முன்னால் மாடு சிறுமியை முட்டிய போது அந்த மாட்டை கட்டுப்படுத்த பலரும் முயற்சித்தும் முடியவில்லை.
தொடர்ச்சியாக குறித்த சிறுமியை காயப்படுத்தி கொண்டே இருந்தது.
இதன்போது பெரும் முயற்சியில் பலர் கல் மற்றும் மரக் கட்டைகளை பயன்படுத்தி அந்த சிறுமியை படுகாயங்களுடன் மீட்டு எடுத்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி தற்போது அருகம்பாக்கம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கட்டாக்காலியாக அலையும் மாடுகள்
இந்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்திருந்தாலும் அவ்வாறான ஒரு நிகழ்வு இலங்கையின் வடக்கு கிழக்கிலும் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் கட்டாக்காலியாக அலைவது மக்களுக்கு பெரும் ஆபத்தான விடயமாக மாறுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதுடன் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
இந்நிலையில் சமீபகாலமாக தெருக்களில் பயணப்படும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்வதாக வடக்கில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் கட்டாக்காலியாக அலையும் மாடுகளினால் பலர் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மக்களுக்கு ஆபத்து
கட்டாக்காலியாக அலையும் மாடுடன் மாட்டி விழுதல், மாடு துரத்துவதால் பயந்து ஓடுதல் என வீதியில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாகவே மாடுகள் மிகவும் அமைதியான மிருகம் ஆகும். இவை யாரையும் அவ்வளவு எளிதில் தாக்காது. அந்தவகையில், தற்போது இந்த காணொளியில் மாணவியை மிகவும் மோசமான நிலையில் தாக்குவதை பார்த்து அனைவரும் வியந்துள்ளனர்.
எனவே மாடுகளை தொழுவத்திலோ மேய்ச்சல் நிலங்களிலோ கட்டி வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வீதியால் நடையில் பயணப்படுபவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
