கொவிஷீல்ட் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசிகளில் ஒன்றாகும்! - ரமேஷ் பத்திரண
கொவிஷீல்ட் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசிகளில் ஒன்றாகும்” என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசென்கா கொவிஷீல்ட் தடுப்பூசி உலகில் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசிகள் ஒன்று என உலக சுகாதார ஸ்தாபனமும் இதனை பரிந்துரை செய்துள்ளது.
தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு பாரியளவில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களில் 2 வீதமானவர்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் ஏனைய சில நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு. இது வழமையானது.
இன்று காலை வரையில் சுமார் 100000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.