அன்டிஜன் பரிசோதனைகளின் மூலம் 41 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வெளியேறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் மூலம் 41 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
எழுமாறான அடிப்படையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களிடம் பரிசோதனை நடாத்தப்படுகின்றது.
கடந்த 18ஆம் திகதி முதல் இதுவரையில் நடத்தப்பட்ட எழுமாறான பரிசோதனைகளில் 41 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நான்கு வெளியேறும் இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 24ஆம் திகதி முதல் சுமார் 17 வெளியேறும் இடங்களில் இந்த அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் பரிசோதனை நடத்த நடமாடும் பரிசோதனை குழுக்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan